செய்திகள்

ராஜேஷ் - ஜீவா கூட்டணியில் புதிய படம்!

ஜீவாவின் புதிய படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் ஜீவாவுக்கு இறுதியாக பிளாக் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றதுடன் ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

தற்போது, பிளாக் பட இயக்குநர் பாலசுப்ரமணி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஜீவா தன் 47-வது படத்தில் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜேஷ் இயக்கிய சிவா மனசுல சக்தி திரைப்படம் ஜீவாவுக்குப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

அதன்பின், பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜீவா - ராஜேஷ் கூட்டணி குறித்த தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளாராம்.

reports suggests actor jiiva acts in director rajesh movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகல்!

குமாரசம்பவம் டிரெய்லர்!

ஜிஎஸ்டி வரிகள் குறைப்பு: வீட்டு உபயோகப் பொருள்கள் விலை குறையும்!

இந்தியாவைப் பாராட்டிய ஜெர்மனி!

குமாரசம்பவம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT