தனுஷ், மிருணாள் தாக்கூர், ஸ்ரேயஸ் ஐயர் 
செய்திகள்

தனுஷா, ஸ்ரேயஸா? மறைமுகமாக பதிலளித்த மிருணாள் தாக்கூர்!

கவனம் பெற்ற மிருணாள் தாக்கூர் பதிவு...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை மிருணாள் தாக்கூர் காதல் கிசுகிசுகளுக்கு பதிலளிக்கும் விதமாக பதிவொன்றைப் பதிவிட்டுள்ளார்.

நடிகை மிருணாள் தாக்கூர் வளர்ந்துவரும் இளம் நடிகையாக உள்ளார். சீதா ராமம் திரைப்படத்திற்குப் பின், நானியுடன் நடித்த ஹாய் நானா படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றுக்கொடுத்தது.

தொடர்ந்து, நடிகர் தனுஷும் மிருணாள் தாக்கூரும் காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் விதமாக மிருணாள் நடித்த திரைப்பட நிகழ்வொன்றில் தனுஷ் கலந்துகொண்டார். மேலும், அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனுஷ் பதிவுக்கு மிருணாள் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

இதற்கிடையே, சில நாள்களாக பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயருடன் மிருணாள் நெருக்கமாக இருப்பதாக வதந்தி பரவியது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிருணாள் தன் தாயுடன் பேசிச்சிரித்தபடி விடியோ ஒன்றை வெளியிட்டு, “அவர்கள் பேசுகிறார்கள். நாங்கள் சிரிக்கிறோம்” என்றதுடன், “வதந்திகள் எப்போதும் இலவச விளம்பரங்களே. எனக்கு அது பிடிக்கும்” எனக் கூறியுள்ளார்.

இது மிருணாள் இருவரில் யாரையும் காதலிக்கவில்லையோ என எண்ண வைத்துள்ளது.

mrunal thakur spokes about romour around her

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருக்கார்த்திகை! சுவாமிமலையில் தேரோட்டம்! வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்!

சத்தீஸ்கரில் 12 நக்சல்கள் சுட்டுக்கொலை! 3 காவல் அதிகாரிகள் பலி!

ஹேப்பி டிசம்பர்... நிக்கி!

திருப்பரங்குன்றம் மலை மீது சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் தீபம் ஏற்ற உத்தரவு!

இதயத்தை இங்கே விடுங்கள்... அலெக்யா ஹரிகா!

SCROLL FOR NEXT