நடிகை வினுஷா தேவி பிரதான பாத்திரத்தில் நடிக்கும் சுற்றும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகை வினுஷா தேவி. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் வினுஷா நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து பனி விழும் மலர் வனம் என்ற தொடரில் நடித்திருந்தார். இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று மக்கள் மனங்களை வென்றார்.
இந்நிலையில், தெலுங்கு மொழியில் வரவேற்பைப் பெற்ற சின்னி என்ற தொடரின் மறு உருவாக்கமாக எடுக்கப்படும் தொடரில் நடிகை வினுஷா நடிக்கிறார்.
வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கும் இந்தத் தொடரில் மற்றொரு பிரதான பாத்திரத்தில் நடிகர் யுவன் மயில்சாமி நடிக்கிறார்.
பெண் குழந்தையை வளர்க்க, வினுஷா எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது. வினுஷா தேவியின் மகளாக பேபி தன்ஷிகா குழந்தை நட்சத்திரமாக நடிக்கிறார்.
பாரதி கண்ணம்மா தொடரைப் போன்றே இந்தத் தொடரிலும் பெண் குழந்தைக்குத் தாயாகவே வினுஷா நடிக்கவுள்ளதால், அவரின் நடிப்பு ரசிக்கும்படியாகவே இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.