ஏவிஎம் சரவணன், ரஜினிகாந்த் 
செய்திகள்

என் கஷ்ட காலங்களில் உடனிருந்தவர் சரவணன்: ரஜினிகாந்த்

ஏவிஎம் சரவணன் குறித்து ரஜினிகாந்த்....

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் ரஜினிகாந்த் மறைந்த தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும் முதுபெரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் இன்று காலை காலமானார்.

இவரது மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் உள்பட பலரும் இரங்கல்களைத் தெரிவித்து வருவதுடன் ஏவிஎம் ஸ்டூடியோவில் வைக்கப்பட்டுள்ள சரவணனின் உடலுக்கு பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அஞ்சலி செலுத்தவந்த நடிகர் ரஜினிகாந்த், “தயாரிப்பாளர் சரவணன் ஒரு ஜெண்டில்மேன். சினிமாவை உயிராக நேசித்தவர். என் கஷ்ட காலங்களில் எனக்குத் துணையாக இருந்தவர். உடையிலும் உள்ளத்திலும் வெண்மையானவர். என் நலன்விரும்பி.

நான் ஏவிஎம் தயாரிப்பில் 9 திரைப்படங்களில் நடித்துள்ளேன். அனைத்தும் மிகப்பெரிய் ஹிட். அதில், சிவாஜி பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. இன்னொரு திரைப்படத்தை எடுக்கத் திட்டமிட்டோம். ஆனால், அதற்குள் இப்படியாகிவிட்டது. அவரது மறைவு என் மனதைப் பாதிக்கிறது” எனத் தெரிவித்தார்.

actor rajinikanth about producer avm saravanan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை: வெடிபொருட்கள், ஜெலட்டின் குச்சிகள் மீட்பு

இந்தியா மீதான 25% கூடுதல் வரி நீக்கப்படும்? - அமெரிக்கா சூசகம்!

யு19 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

ஹரியாணா: 50 வரை எண்ணத் தெரியாத 4 வயது மகளை அடித்துக்கொன்ற தந்தை கைது

ஜன நாயகன் வருமா? வராதா?

SCROLL FOR NEXT