இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் சுமார் 100 படங்களுக்கு இசையமைத்துள்ள நிலையில், சில திரைப்படங்களில் நாயகனாகவும் நடித்து வருகின்றார்.
இவரது நடிப்பில் வெளியான, டார்லிங், சர்வம் தாளமயம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில், நடிகர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, “ஹாப்பி ராஜ்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நகைச்சுவையான கதைகளத்துடன் உருவாகி வரும் இந்தப் படத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘ஹாப்பி ராஜ்’ படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கின்றார்.
இதையும் படிக்க: நலன் குமாரசாமி - கார்த்தியின் வா வாத்தியார் டிரைலர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.