பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் விஜே பார்வதியும் நடிகர் கமருதீனும் தொடர்ந்து விதி மீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருவரும் ஒலிவாங்கியை (மைக்) சரியாக வைத்துக்கொள்ளாமல், அதனை அகற்றிவிட்டு ரகசியமாகப் பேசி வருகின்றனர்.
இவ்வாறு தொடர்ந்து இவர்கள் செய்து வருவதால், ஆத்திரமடைந்த பிக் பாஸ், முட்டை, பால், தேநீர் என ஒட்டுமொத்த பிக் பாஸ் வீட்டின் அடிப்படை உணவுப் பொருள்களைப் பறித்தார். சக போட்டியாளர்கள் அனைவரின் உணவுப் பொருள்கள் பறிக்கப்பட்டுள்ளன.
இதனால், போட்டியாளர்கள் அனைவரும் பார்வதி மற்றும் கமருதீனின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதற்கு வருந்தாமல், தொடர்ந்து தங்கள் தரப்பு வாதங்களையே பார்வதியும் கமருதீனும் முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வாரத்திற்கு கேப்டனாக பொறுப்பேற்றுள்ள நடிகர் அமித் பார்கவ், அடிப்படை உணவுப் பொருள்களை திரும்பப் பெறுவதற்கு திட்டம் தீட்டினார்.
இதன்படி, விஜே பார்வதியும் கமருதீனும் இனி விதிகளை மீறாமல் இருந்தால் உணவுப் பொருள்கள் கிடைக்கும் என்பதால், அவர்கள் இருவரையும் இனி ஒவொருவருடன் மற்றொருவர் பேசக்கூடாது என உத்தரவிட்டார்.
சக போட்டியாளர்கள் அனைவரின் உணவும் பறிக்கப்பட்டதற்கு, கேப்டனாக தான் வழங்கும் தண்டனை இது எனவும் குறிப்பிட்டார்.
இந்த வாரம் முழுக்க விஜே பார்வதியும் கமருதீனும் பேசாமல் இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு இல்லாமல் விதிகளை மீறினால், வீட்டில் உள்ள யாரும் இவர்களுடன் பேசக்கூடாது என உத்தரவிட்டார்.
இந்த தண்டனையை ஏற்க மறுத்த பார்வதி, அடிப்படையிலேயே இந்த தண்டனை தவறானது என்றும், ஒதுக்கிவைப்பதைப் போன்று உள்ளதாகவும் கூறினார்.
எனினும் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் பலரும் இந்த தண்டனை சரியானதே எனக் குறிப்பிட்டனர். விதிமீறல் குறித்து இந்த வார இறுதியில் விஜய் சேதுபதி கேள்வி எழுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | ஒரே மேடையில் தோன்றிய 3 பிக் பாஸ் தொகுப்பாளர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.