பிரபல தெலுங்கு நடிகை ஆமணி தெலங்கானா பாஜகவில் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகை ஆமணி, மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி மற்றும் தெலங்கானா பாஜக தலைவர் என். ராமசந்தர் ராவ் முன்னிலையில், இன்று (டிச. 20) பாஜகவில் இணைந்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், தெலுங்கு திரையுலகின் முன்னணி ஒப்பனைக் கலைஞர் ஷோப லதா என்பவரும் பாஜகவில் இணைந்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஆமணி, நடிகர்கள் கமல்ஹாசன், நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா உள்ளிட்டோரின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இத்துடன், நடிகர் கமல்ஹாசன் நாயகனாக நடித்து கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான ”சுப சங்கல்பம்” திரைப்படத்தில் நடிகை ஆமணி நாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.