நடிகர் விக்ராந்த் 'எல்பிடபுள்யூ- லவ் பியாண்ட் விக்கெட்' என்ற இணையத் தொடர் மூலம் வெப் தொடரில் அறிமுகமாகிறார்.
ஹார்ட் பீட், போலீஸ் போலீஸ் இணையத் தொடர்களைத் தொடர்ந்து, ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் ஜனவரி 1 ஆம் தேதி எல்பிடபுள்யூ இணையத் தொடர் வெளியாகிறது.
இந்தத் தொடரை அருணா ராக்கி எழுதி, கணேஷ் கார்த்திகேயன் இயக்கியுள்ளார். ‘ஹார்ட்பீட்’ தொடரை தயாரித்த அட்லீ பேக்டரி நிறுவனம் இந்தத் தொடரை தயாரித்துள்ளது.
மேலும், இந்தத் தொடரில் சிந்து ஷியாம், நியதி, ஹரிஷ், அயாஸ் கான், அக்ஷிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராக இருந்த ஒருவர், சில பிரச்னைகள் காரணமாக தனது புகழை இழக்கிறார். பின்னர், அவரே ஒரு கிரிக்கெட் குழுவை உருவாக்கி பயிற்சியாளராக வென்றாரா? என்பதுதான் எல்பிடபுள்யூ தொடரின் கதை.
நடிகர் விக்ராந்த் நாயகனாக அவர் நடித்த படங்கள் சரியான வெற்றியைப் பெறாததால் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இவர், விஷாலுடன் பாண்டியநாடு படத்தில் நடித்து மீண்டும் கவனம் பெற்றார். முன்னதாக, லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். ஆனால், அப்படமும் தோல்விப் படமாக அமைந்தது.
பின்னர், சோனியா அகர்வால் நடித்த ’வில்’ (Will) திரைப்படத்தில் இவர், சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து, எல்பிடபுள்யூ இணையத் தொடர் மூலம் விக்ராந்த் மீண்டும் ரசிகர்களுக்கு கம்பேக்(come back) கொடுப்பாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.