துரந்தர் காட்சி  
செய்திகள்

துரந்தர் திரைப்படம் செய்த புதிய சாதனை!

துரந்தர் திரைப்படம் செய்த புதிய சாதனை குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

துரந்தர் திரைப்படம் ஹிந்தி திரையுலக வரலாற்றில் அதிக வசூல் செய்த படங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

துரந்தர் படம் இதுவரை உலகளவில் ரூ. 1006. 7 கோடி வரை வசூலித்து இந்தாண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது.

இந்தாண்டு விக்கி கௌஷல் நடிப்பில் வெளியான சாவா படத்தின் ஹிந்தி மொழி வசூலையும், கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான ஸ்த்ரீ -2 படத்தின் ஹிந்தி மொழி வசூலையும் துரந்தர் திரைப்படம் முறியடித்துள்ளது.

புஷ்பா - 2 திரைப்படம் ஹிந்தி மொழியில் மட்டும் ரூ. 800 கோடியைக் கடந்து வசூல் செய்தது. இந்த நிலையில், துரந்தர் திரைப்படம் ஹிந்தி மொழியில் வெளியான ஜவான், பாகுபலி -2 உள்ளிட்ட ஹிட் படங்களின் ஹிந்தி மொழி வசூலை பின்னுக்குத் தள்ளி, இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

ஆதித்யா தார் இயக்கத்தில் துரந்தர் திரைப்படம் கடந்த டிச.5-இல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தப் படத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்‌ஷய் கண்ணா, அர்ஜுன் ராம்பால், சாரா அர்ஜுன், சஞ்சய் தத் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

பாகிஸ்தான் நாட்டில் உளவாளியாகச் சென்று, அங்கிருந்து இந்தியாவுக்கு உதவும் பாத்திரத்தில் நடித்துள்ள ரன்வீர் சிங்கின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

பி62 ஸ்டூடியோஸ் மற்றும் ஜியோ ஸ்டூடியோஸ் இணைந்து இந்தப் படத்தை வெளியிட்டது. துரந்தர் இரண்டாம் பாகம் அடுத்தாண்டு மார்ச் 19ஆம் தேதி வெளியாகிறது.

துரந்தர் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் டிச. 30 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The film 'dhurandhar' has secured the second position among the highest-grossing films in the Hindi language.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025 ஆசியா! புகைப்படங்கள்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற சொன்னது பாஜக அல்ல, நீதிமன்றமே: குஷ்பு

ராணுவ வீரர்களுக்கு தேநீர் கொடுத்த 10 வயது சிறுவனுக்கு பால புரஸ்கார் விருது!

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா செய்த மிகப் பெரிய தவறு இதுதான்: சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

யார் யாருடன் பாஜக கூட்டணி? சரத்குமார் பேட்டி!

SCROLL FOR NEXT