பைரவியாக மாளவிகா மோகனன்! தி ராஜா சாப் படத்தின் புதிய போஸ்டர்!
தி ராஜா சாப் படத்தில் நடிகை மாளவிகா மோகனின் தோற்றம் குறித்து...
நடிகை மாளவிகா மோகனின் கதாபாத்திர போஸ்டரை தி ராஜா சாப் படக்குழு வெளியிட்டுள்ளது.
ஃபீபுள் மீடியா பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் மாருதி இயக்கத்தில் தி ராஜா சாப் படத்தில் பிரபாஸ் நடித்து முடித்துள்ளார்.
இந்தப் படத்தில் சஞ்சய் தத், நிதி அகர்வால், மாளவிகா, ரிதி குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
Advertisement
Advertisement
ஃபேண்டசி கலந்த ஹாரர் கதையாக உருவான இந்தப் படம் வரும் ஜன. 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தில் ’பைரவி’ எனும் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
இந்தப் போஸ்டரில் கறுப்பு நிறத்திலான புடவையில் மாளவிகா மோகனன் மிகவும் ஸ்டைலாக இருக்கிறார்.
summary