இயக்குநர் ரியான் கூக்ளர் தான் எழுதிய ஒரிஜினல் (அசலான) பிளாக் பாந்தர் 2 திரைப்படத்தின் 180 பக்க திரைக்கதைக் குறித்து பேசியுள்ளார்.
பிளாக் பாந்தர் படத்தின் நாயகன் சாட்விக் போஸ்மென் புற்றுநோயினால் 2020-ல் இறந்ததால் கதையை மாற்ற வேண்டியிருந்ததாகக் கூறியுள்ளார்.
சாட்விக் போஸ்மென் மறைவினால் மாற்றப்பட்ட கதை
மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ச்ஸில் முதல்முறையாகக் கருப்பின சூப்பர் ஹீரோவாக பிளாக் பாந்தர் திரைப்படம் கடந்த 2018-ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
இதன் இரண்டாம் பாகம் 2022-இல் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டானது. பிளாக் பாந்தர் படத்தின் நாயகன் சாட்விக் போஸ்மென் புற்றுநோயினால் 2020-ல் இறந்ததால் கதையை மாற்ற வேண்டியிருந்ததாக இயக்குநர் கூறியுள்ளார்.
இது குறித்து பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இயக்குநர் பேசியதாவது:
உண்மையில் என்ன நடந்தது எனில், நான் திரைக்கதையை எழுதி அவரிடம் படிக்கக் கொடுத்தேன். அவர் நோய்மையில் இருந்ததால் அவரால் படிக்க முடியவில்லை. அப்படித்தான் அந்தக் காலம் இருந்தது. அதெல்லாம் நடக்காது என்ற நிலையில் அவர் இருந்தார்.
8-இன் சடங்குகள்...
அந்தப் படத்திற்காக பல வெர்ஷன்களை உருவாக்கினேன். ஏனெனில் சாட்விக் மிகச்சிறந்த நடிகர் எனத் தெரியும்.
முதல் பாகத்தில் அவரிடம் அதிகமாக தூக்கி எறிந்தேன். ஆனால், அதெல்லாம் வெறுமென அவரின் மேல்மட்டத்தைக் கிளப்புவது போலத்தான் என பிறகுதான் புரிந்தது.
காலியான டிரக்கை அவர்மீது வைத்ததுபோல் இருந்தது. அந்தக் கதையின் முக்கியமான விஷயமே 8-இன் சடங்குகள்தான். இளவரசன் 8 வயதில் இருக்கும்போது 8 நாள்கள் அவரின் தந்தையுடன் புதரில் தங்கியிருக்க வேண்டும்.
அந்த நாள்களில் புதருக்கு எந்த ஆயுதங்களுமே எடுத்துச் செல்லக் கூடாது. தந்தை சொல்வதெல்லாம் அவன் செய்தாக வேண்டும். அதேசமயம் அந்த 8 நாளில் இளவரசன் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் தந்தை பதிலளிக்க வேண்டும்.
சாட்விக் போஸ்மென் இறப்பு மிகவும் தொந்தரவு செய்தது...
அந்த நாளில்தான் நமோர் தனது தாக்குதலைத் தொடுக்கவிருப்பார். நீங்கள் திரையில் பார்த்த நமோரைவிட மிகவும் மாறுபட்ட கதை அது. மிகவும் கொடூரமான அந்த வில்லனை இந்த நாள்களில் நாயகன் சந்தித்தாக வேண்டும்.
இந்த எல்லாமும் செய்யும்போது மகன் அவனது இடுப்பிலேயே இருக்க வேண்டும். அப்படி மகன் உடன் இருக்காவிட்டால் சடங்குகளை மீறீயதாகிவிடும்.
இதுதான் கதை. மிகவும் பைத்தியக்காரத்தனமானது. நாயகன் கொல்லப்படுவார். ஆனால், வாழ்க்கை அப்படியே செல்லும்.
சாட்விக் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது இறப்பு என்னை மிகவும் தொந்தரவு செய்தது. அவர் எனக்கு எப்படியானவர் எனத் தெரிந்திருந்தால் அவர் மிகவும் மகிழ்ந்திருப்பார். நான் அவருக்காக அதிசயத்தை உருவாக்கி இருந்தேன் என்றார்.
இவரது இயக்கத்தில் வெளியான 2025-ல் வெளியான சின்னர் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.