விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பூங்காற்று திரும்புமா தொடர் இந்த வார இறுதியில் நிறைவடைகிறது.
மோதலும் காதலும் தொடரில் நாயகன் சமீர் மற்றும் முத்தழகு நாயகி ஷோபனா ஆகியோர் பூங்காற்று திரும்புமா தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்து வந்தனர்.
இந்தத் தொடர் கடந்த ஏப். 28 ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், குறுகிய காலத்தில் 7 மாதங்களில் நிறைவடைகிறது. பூங்காற்று திரும்புமா தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
அதீத காதலால் மனைவியை சந்தேகிக்கும் கணவன் இடம் சிக்கிக்கொண்டு மனைவி எதிர்கொள்ளும் சவால்களே மையப்படுத்தி பூங்காற்று திரும்புமா தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
இத்தொடரின் இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், வரும் ஜனவரி 3 ஆம் தேதி நிறைவுப்பகுதி ஒளிபரப்பாகவுள்ளது.
கலைஞர் தொலைக்காட்சியில் எஸ். வி. சேகர் உடன் நடிகை ஷோபனா நடித்த மீனாட்சி சுந்தரம் தொடர் குறுகிய காலத்தில் நிறைவடைந்த நிலையில், பூங்காற்று திரும்புமா தொடரும் நிறைவடைகிறது.
பூங்காற்று திரும்புமா தொடருக்குப் பதிலாக, சுற்றும் விழி சுடரே தொடர் ஜன. 5 ஆம் தேதி திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.