செய்திகள்

கேம் சேஞ்சர் ஓடிடி தேதி!

கேம் சேஞ்சர் ஓடிடி தேதி குறித்து...

DIN

கேம் சேஞ்சர் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் வணிக ரீதியிலான தோல்வியைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண், எஸ்.ஜே. சூர்யா, நடிகை கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்திருந்தார்.

இயக்குநர் ஷங்கரின் முதல் நேரடி தெலுங்குப் படமாக இந்தப் படம் ஜன. 10 வெளியானது. அரசியல் கதையாக உருவான இது கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதனால், வசூலில் பெரிய பாதிப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், முதல் நாள் வசூலாக கேம் சேஞ்சர் ரூ. 186 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஆனால், உண்மையில் ரூ. 450 கோடி பட்ஜெட்டில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படம் திரையரங்க வசூலில் இதுவரை ரூ. 150 கோடிகூட வசூலிக்கவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கேம் சேஞ்சர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகிற பிப். 7 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைசன் டிரைலர் தேதி..! முதல் வெற்றி பெறுவாரா துருவ் விக்ரம்?

நோபல் கிடைக்காவிட்டால் என்ன? அதைவிட பெரியது கிடைத்துவிட்டது: டிரம்ப்

90 பேருக்கு கலைமாமணி விருதுகள்! இன்று வழங்கப்படுகின்றன!!

சீனப் பொருள்களுக்கு கூடுதலாக 100% வரி: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

பணமோசடி வழக்கு: அனில் அம்பானி ரிலையன்ஸ் குழும நிர்வாகி கைது!

SCROLL FOR NEXT