விடாமுயற்சி சிறப்பு போஸ்டர் வெளியீடு!
விடாமுயற்சி திரைப்படம் வியாழக்கிழமை வெளியாகவுள்ளது.
விடாமுயற்சி திரைப்படம் வியாழக்கிழமை வெளியாகவுள்ள நிலையில், சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ படமானது உலகம் முழுவதும் திரையரங்குகளில் நாளை வெளியாகவுள்ளது.
மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன், ஆரவ், ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். பாடகர் அறிவு எழுத்தில் அந்தோனி தாசன் குரலில் வெளியான ’சவதீகா’ பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், படத்தின் வெளியீட்டுக்கு ஒருநாளுக்கு முன்னதாக நடிகர் அஜித் குமார் மற்றும் அர்ஜுன் இருக்கும் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
“ஒவ்வொரு முயற்சியும் வெற்றிக்கு வழி வகுக்கும். நாளை முதல் திரையரங்குகளில் விடாமுயற்சி புயல் வீசத் தயாராக உள்ளது. செயலில் விடாமுயற்சியைக் காணுங்கள்” என்று படத் தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.