பாட்டல் ராதா போஸ்டர், சஞ்சனா நடராஜன்.  
செய்திகள்

மறக்க முடியாத பயணம்..! பாட்டல் ராதா குறித்து சஞ்சனா நெகிழ்ச்சி!

பாட்டல் ராதா படத்தில் நடித்தது குறித்து நடிகை சஞ்சனா நடராஜன் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

DIN

பாட்டல் ராதா படத்தில் நடித்தது குறித்து நடிகை சஞ்சனா நடராஜன் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

நோட்டா, கேம் ஓவர், சார்பட்டா பரம்பரை, ஜகமே தந்திரம், ஜிகர்தண்டா 2 ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை சஞ்சனா நடராஜன்.

சமீபத்தில் வெளியாகி கவனம்பெற்ற பாட்டல் ராதா படத்தில் நாயகியாக அசத்தியிருந்தார். இந்தப் படத்தில் அஞ்சலம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படத்தை தினகர் சிவலிங்கம் இயக்க பா. இரஞ்சித் தயாரித்திருந்தார்.

இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் சஞ்சனா நடராஜன் கூறியதாவது:

மறக்க முடியாத பயணம்

சமீபத்தில் வெளியான பாட்டல் ராதா படத்தினால் எனக்கு கிடைத்த மிகுதியான அன்புக்கும் பாராட்டும் நான் நெகிழ்ச்சியடைந்துள்ளேன். ’அஞ்சலம்’ கதாபாத்திரத்தில் நடித்தது மறக்க முடியாத பயணம். அழகாக எழுதப்பட்ட கதாபாத்திரத்தில் என்னை நம்பி நடிக்க வைத்த இயக்குநருக்கு எனது இதயப்பூர்வமான நன்றிகள்.

இந்தச் சிறப்பான படத்தில் என்னையும் இணைத்ததற்கு தயாரிப்பாளர்கள் பா.ரஞ்சித், அருண் பாலாஜிக்கு மிகப்பெரிய நன்றிகள். அவர்களுடைய நோகத்தில் நான் பங்குபெற்றதே கௌரவமானது.

அதீத திறமைசாலி குருசோம சுந்தரம் உடன் திரையில் நடித்தது மிகப்பெரிய கற்றல் அனுபவமாக இருந்தது. படம் முழுவதும் எனக்கு அளித்த அவரது ஆதரவுக்கு என் மனமார நன்றி.

எனது நடிப்பைப் பாராட்டிய பத்திரிகைகள், ஊடகங்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. உங்களின் ஆதரவுதான் எனது சினிமா ஆர்வத்துக்கு எரிபொருளாக இருக்கிறது. வருங்காலத்திலும் நல்ல கதைகளைக் கொண்ட தரமான திரைப்படங்களின் நடிக்க காத்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT