மகேஷ் பாபுவின் புதிய சொகுசு திரையரங்கம் படங்கள்: எக்ஸ் / மகேஷ் பாபு
செய்திகள்

மகேஷ் பாபுவின் புதிய சொகுசு திரையரங்கம்..! டிக்கெட் விலை எவ்வளவு?

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் சொகுசு திரையரங்கம் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டது.

DIN

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் ஏஎம்பி சினிமாஸ் (ஏசியன் மகேஷ் பாபு) என்ற புதிய சொகுசு திரையரங்கம் மக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது.

ஏஎம்பி சினிமாஸ் நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து ஏசியன் சினிமாஸ் இந்தத் திரையரங்குகளை அமைத்திருக்கிறது.

பல தொழில்களில் ஆர்வம் உடைய மகேஷ் பாபு சினிமா திரையரங்கிலும் ஆர்வமாக இருக்கிறார். முதல்முறையாக ஏஎம்பி சினிமாஸ் 2018இல் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது புதியதாக ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது.

ஏழு 3டி திரைகளைக் கொண்டதாக இந்த ஏஎம்பி சினிமாஸ் அமைக்கப்பட்டுள்ளது. விவிஐபிக்களுக்கும் தனியாக திரைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிளாட்டினம், கோல்டு, லாங்கர்ஸ் என்ற 3 விதமான வகைகளுக்கு டிக்கெட் விலை முறையே ரூ.350, ரூ.295, ரூ.295 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏஎம்பி சினிமாஸில் விடாமுயற்சி படத்தின் டிக்கெட் விலை.

நடிகர் மகேஷ் பாபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஏஎம்பி சினிமாஸின் அறிமுக விடியோவை பகிர்ந்துள்ளார். அதில், “சொகுசு... சௌகரியம்... அதிகபட்ச அளவில் அனுபவம்.. அதுதான் ஏஎம்பி சினிமாஸ். குழுவுக்கு வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

நடிகர் மகேஷ் பாபு தற்போது அவரது 29ஆவது படமாக பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி உடன் இணைந்து புதிய படத்துக்காக தயாராகி வருகிறார்.

கடைசியாக மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT