செய்திகள்

ஹே ராம் - 25 ஆண்டுகள் நிறைவு!

ஹே ராம் திரைப்படம் குறித்து..

DIN

நடிகர் கமல் ஹாசனின் ஹே ராம் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

நடிகர் கமல் ஹாசன் எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்த திரைப்படமான ஹே ராம் கடந்த 2000 ஆம் ஆண்டு பிப். 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படம் குறித்து போதிய பார்வைகளும் விமர்சனங்களும் கிடைக்காததால் வசூல் ரீதியாக அன்று தோல்விப் படமானது. ஆனால், நுட்பமான காட்சிகள் வழியாக கமல் ஹாசன் பெரிய திரையனுவபத்தைக் கொடுத்தற்காகவே  இன்றும் விமர்சகர்களால் இப்படம் பாராட்டப்பட்டு வருகிறது.

காந்தியைக் கொலை செய்ய சென்ற சாகேத் ராம் என்பவர் அடையும் மன மாற்றங்களும் மத நல்லிணக்கத்தையும் திரைக்கதையில் திறமையாகக் கையாளப்பட்டிருந்தன.

இளையராஜாவின் ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ பாடல் மற்றும் பின்னணி இசை இப்படத்தின் அழகியலுக்கு மிகச்சிறந்த பங்களிப்பைச் செய்தன. 

சரியாக, ஹே ராம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்படத்தை யூடியூப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் சேனலில் 4கே தரத்தில் இலவசமாகக் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொந்த ஊரில் கிடா வெட்டி விருந்தளிந்த தனுஷ்!

டார்ஜிலிங்கில் நிலச்சரிவு: 7 பேர் பலி; பலர் மாயம்! - பிரதமர் மோடி இரங்கல்

ஆஹா கல்யாணம் தொடர் 644 எபிசோடுகளுடன் முடிவு!

"மகர ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

இந்திய அணிக்கு கோப்பையை வழங்காத பாகிஸ்தான் அமைச்சருக்கு தங்கப் பதக்கம்?

SCROLL FOR NEXT