சத்ரபதி சம்பாஜியின் கதையாக உருவான சாவா திரைப்படம் வசூலைக் குவித்து வருகிறது.
சத்ரபதி சிவாஜியின் மகனான சம்பாஜியின் கதையாக உருவான சாவா (chchaava) படத்தில் சம்பாஜியாக நடிகர் விக்கி கௌஷலும் நாயகியாக ரஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளனர்.
லஷ்மன் உதேகர் இயக்கிய இப்படம் கடந்த பிப். 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இதையும் படிக்க: வணங்கான் ஓடிடி வெளியீட்டுத் தேதி!
சிவாஜியின் மறைவைத் தொடர்ந்து சம்பாஜியின் மராட்டிய படைக்கும் முகலாயப் படைக்கும் இடையே நடக்கும் போராக இப்படத்தின் கதை உருவாகியிருந்தது.
இந்த நிலையில், வெளியான முதல் வாரத்திலேயே சாவா ரூ. 200 கோடி வரை வசூலித்து மிகப்பெரிய வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. முக்கியமாக, மகாராஷ்டிரத்தில் பல திரைகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகவே திரையிடப்படுகின்றன.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.