செய்திகள்

நல்லது கெட்டது இணைந்ததுதான் தக் லைஃப்: கமல் ஹாசன்

தக் லைஃப் குறித்து கமல் ஹாசன்...

DIN

நடிகர் கமல் ஹாசன் தக் லைஃப் படம் குறித்து பேசியுள்ளார்.

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப். கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தில்லி, ரஷியா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது.

நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் ஓடிடி மற்றும் வெளியீட்டு உரிமங்கள் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கமல் ஹாசனிடம், “தக் லைஃப்பில் ரங்கராஜ சக்திவேல் நாயக்கர் நல்லவரா இல்லை கெட்டவரா? எனக் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு கமல்,“கணக்கிற்கு கூட்டல் முக்கியமா இல்லை கழித்தல் முக்கியமா என்றால் எதை சொல்ல முடியும்? நல்லதும் கெட்டதும் இணைந்ததுதான் தக் லைஃப்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

SCROLL FOR NEXT