மலையாள நடிகர் குஞ்சக்கோ போபன் படம்: எக்ஸ் /
செய்திகள்

படத்தின் வெற்றியை மனைவிக்கு சமர்ப்பித்த மலையாள நடிகர்..!

மலையாள நடிகர் குஞ்சக்கோ போபன் தனது படத்தின் வெற்றியை மனைவிக்கு சமர்ப்பித்துள்ளார்.

DIN

மலையாள நடிகர் குஞ்சக்கோ போபன் தனது படத்தின் வெற்றியை மனைவிக்கு சமர்ப்பித்துள்ளார்.

ஷாகி கபீர் எழுத்தில் ஜித்து அஷ்ரஃப் இயக்கத்தில் ஆபீஸர்ஸ் ஆன் டூட்டி படத்தில் குஞ்சக்கோ போபன் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படம் பிப்.20ஆம் தேதி வெளியாகியது.

படத்தின் நல்ல வரவேற்பினால் கூடுதலாக 100 திரைகள் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் பிரியாமணி நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் வெற்றிக்கு நடிகர் குஞ்சக்கோ போபன் தனது இன்ஸ்டா பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். அதில் கூறியதாவது:

அழகான மனைவியுடன் ஆபிஸர்ஸ் ஆன் டூட்டி. என்னை ஏற்றுக்கொண்டதுக்கு நீ எவ்வளவு ஏங்கினாய் என்பது எனக்குத் தெரியும். நீ தொடர்ச்சியாக எனக்கு ஆதரவு அளித்துள்ளாய் ஒரு தோழியாக, விமர்சகராக, மிகப்பெரிய ரசிகையாக, எனது பதற்றத்தை குறைப்பவளாக இருந்துள்ளாய்.

இந்தப் படத்தின் வெற்றி என்னைவிடவும் உனக்கும்தான் பொருத்தமானது. உனக்கு காதலையும் சல்யூட்டையும் தெரியப்படுத்தும் ஆபிஸராக மிக நுட்பமாகக் கூறுவதானால் உனது கணவனாக இதைக் கூறுகிறேன்.

இந்தப் படத்தை எனது வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக்கிய அனைவருக்கும் எனது நன்றிகள் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்வியை சுமையாக நினைக்கக்கூடாது! மாணவர்களுடன் மோடி கலந்துரையாடல்!

சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலை: முதல்வர் ஸ்டாலின் திறப்பு!

விஜய்க்கு விதித்த ரூ. 1.50 கோடி அபராதம் செல்லும்! உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பிப்.13-ல் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் கூடுகிறது!

ஓடிடியில் நாளை வெளியாகிறது பராசக்தி!

SCROLL FOR NEXT