தியா படம் | இன்ஸ்டாகிராம்
செய்திகள்

பவித்ரா தொடரில் நடிக்கும் நெஞ்சத்தைக் கிள்ளாதே நாயகி!

பவித்ரா தொடரில், நடிகை தியா முதன்மை பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

DIN

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள பவித்ரா தொடரில், நடிகை தியா முதன்மை பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

ஜீ தமிழின் முதன்மை தொடர்களான நீதானே என் பொன்வசந்தம், புதுப் புது அர்த்தங்கள், சீதாராமன் ஆகிய தொடர்களை தயாரித்த ஈஸ்தெல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடரை தயாரித்தது.

இத்தொடரில் நடிகர் ஜெய் ஆகாஷ் நடிகை ரேஷ்மா முரளிதரன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்திருந்தனர். நடிகை தியா முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள பவித்ரா தொடரில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இத்தொடரில் நடிகர் நவீன் இவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

இளம் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கவுள்ளதால் பவித்ரா தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தியா

கண்ணம்மா, கெளரி போன்று குடும்பப் பெண்களைக் கவரும் வகையிலான தொடர்களை ஒளிபரப்பிவரும் கலைஞர் தொலைக்காட்சி, தற்போது இளமை ததும்பும் பவித்ரா தொடரை ஒளிபரப்பவுள்ளது.

புத்திசாலித்தனமான கிராமத்துப் பெண், நகரத்து இளைஞன் மீது காதல் கொண்டு அதில் சந்திக்கும் சவால்களும் பிரச்னைகளும் மையமாக வைத்து பவித்ரா தொடர் எடுக்கப்படவுள்ளது. காதல், பாசம், தனிப்பட்ட வளர்ச்சி, என பல்வேறு உணர்வுகளைக் கொண்டு ஒளிபரப்பாகவுள்ளது.

தியா

இத்தொடரின் தலைப்பு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. விரைவில் மற்ற நடிகர்கள் மற்றும் ஒளிபரப்பாகும் நேரம் குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளன.

இதையும் படிக்க | விஜய் சேதுபதிக்கு இன்ப அதிர்ச்சி அளித்த விஜே விஷால்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

SCROLL FOR NEXT