துருவ நட்சத்திரம் எப்போது? இசையமைப்பாளர் தகவல்!
துருவ நட்சத்திரம் படத்தின் வெளியீடு குறித்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அப்டேட்
நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் வெளியீடு குறித்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அப்டேட் கொடுத்துள்ளார்.
இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி, 7 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவராமல் கிடப்பில் போடப்பட்ட திரைப்படமான துருவ நட்சத்திரத்தை ஏப்ரல் மாதம் வெளியிடத் திட்டமிருப்பதாக, படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூறியுள்ளார். தனது இசை நிகழ்ச்சி குறித்த அறிவிப்பின்போது, துருவ நட்சத்திரம் படம் குறித்த அறிவிப்பையும் ஹாரிஸ் ஜெயராஜ் பகிர்ந்து கொண்டார்.
2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம், நிதி பிரச்னை உள்பட பல பிரச்னைகளால் நீண்ட காலமாக வெளிவராமல் தள்ளிப்போனது. இருந்தபோதிலும், 2023-ல் நவம்பர் மாதம் துருவ நட்சத்திரம் வெளியிடப்படவிருந்த நிலையில், படம் வெளியிடுவது தள்ளிப்போவதாக வெளியீட்டுக்கு முந்தைய நாளில் இயக்குநர் கௌதம் மேனன் அறிவித்தார்.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் பார்த்திபன், விநாயகன், சிம்ரன், ராதிகா, ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: ரெட் டிராகனாக அஜித்... குட் பேட் அக்லி டீசர்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.