முகப்பு
செய்திகள்

ஸ்வீட்ஹார்ட் பட டிரைலர்..!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Updated On : 28 பிப்ரவரி 2025, 11:58 am IST
ஸ்வீட்ஹார்ட் போஸ்டர்.
பகிர்:

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ஸ்வீட்ஹார்ட் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதுடன் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் பியார் பிரேம காதல், ஹை ஆன் லவ், விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.

பியார் பிரேம காதல் படத்தைத் தவிர மற்ற படங்கள் வணிக ரீதியான வெற்றியைப் பெறவில்லை என்றாலும் தயாரித்த அனைத்து படங்களும் ரசிக்கக்கூடிய வகையிலேயே உருவாகியிருந்தன.

Advertisement

Advertisement

தற்போது, யுவனின் ஒய்எஸ்ஆர் (YSR) நிறுவனம் ஸ்வீட்ஹார்ட் படத்தை தயாரித்து வருகிறது. இதில், நாயகனாக நடிகர் ரியோ ராஜ் நடிக்க அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்குகிறார்.

காதல் திரைப்படமாக உருவாகும் இதில் கோபிகா ரமேஷ் நாயகியாகவும் ரெடின் கிங்ஸ்லி, அருணாச்சலம், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படம் மார்ச் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிரைலர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.