செய்திகள்

காதலிக்க நேரமில்லை ’பிரேக் அப் டா’ பாடல்!

காதலிக்க நேரமில்லை படத்திலிருந்து புதிய பாடல் வெளியானது...

DIN

காதலிக்க நேரமில்லை படத்தின் பிரேக் அப்டா பாடல் வெளியானது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'.

நவீன காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜன. 14 ஆம் தேதி பொங்கலன்று வெளியாகவுள்ளது.

முன்னதாக இப்படத்தில் இடம்பெற்ற, ‘என்னை இழுக்கதடி’ பாடல் வெளியாகி பெரிதாக ஹிட் அடித்தது. இரண்டாவது பாடலான, ‘லாவண்டர் நிறமே..’ பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், காதலிக்க நேரமில்லை படத்தின் புதிய பாடலான ‘பிரேக் - அப் டா’ பாடலைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த இப்பாடலை ஸ்நேகன் எழுத, ஸ்ருதி ஹாசன் மற்றும் ஆதித்யா ஆர்கே இணைந்து பாடியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேச்சுக்கு நடுவில் கடுப்பான Seeman! மேடையிலிருந்து இறங்கியதால் பரபரப்பு! | NTK

உக்ரைனுக்கு நேட்டோவில் இடமில்லை! டிரம்ப் அறிவிப்பு

நேட்டோவில் இணைய முடியாது.. ஸெலன்ஸ்கிக்கு டிரம்ப் தகவல்!

ஐ. பெரியசாமி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம்!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

SCROLL FOR NEXT