நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி, மனிஷா கொய்ராலா.  
செய்திகள்

நேபாள நிலநடுக்கத்துக்குப் பிறகு... மனிஷா கொய்ராலா பகிர்ந்த விடியோ!

நடிகை மனிஷா கொய்ராலா நேபாள நிலநடுக்கத்துக்குப் பிறகு தான் என்ன செய்தேனேன விடியோ பகிர்ந்துள்ளார்.

DIN

நடிகை மனிஷா கொய்ராலா நேபாள நிலநடுக்கத்துக்குப் பிறகு தான் என்ன செய்தேன் என விடியோ பகிர்ந்துள்ளார். அதில் உடற்பயிற்சி செய்யும் விடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

அதில், “நிலநடுக்கத்துக்குப் பிறகு காலையில் எழுந்தவுடன்!!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உடற்பயிற்சியில் மனிஷா கொய்ராலா.

சீன எல்லைக்குள்பட்ட திபெத் - நேபாளம் எல்லைப் பகுதியில் இன்று காலை 6.35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுக் கோலில் 6.8 ஆகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 62 பேர் காயமடைந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலை 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் அதிர்வுகள் வட இந்தியாவின் பிகார், மேற்கு வங்கம், சிக்கிம், தில்லி பகுதிகளிலும் உணரப்பட்டன.

காலை 6.35 மணிக்கு இந்த அதிர்வுகள் ஏற்பட்டதாக என்சிஎஸ் தெரிவித்துள்ளது. அட்சக்கோடு 28.86 டிகிரி, தீர்க்க ரேகை 87.51 டிகிரி சந்திக்கும் இடத்தில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் நேபாள எல்லை திபெத்தின் தன்னாட்சி பகுதியில் அமைந்திருந்தது.

மனிஷா கொய்ராலா கடைசியாக தமிழில் மாப்பிள்ளை, கேம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். 2024இல் ஹீராமண்டி இணையத் தொடரிலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT