விக்னேஷ் சிவன், யுவன், விஷ்ணு வரதன்.  படம்: யூடியூப் / எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ்
செய்திகள்

நேசிப்பாயா பாடல் உருவானது எப்படி? படக்குழு வெளியிட்ட விடியோ!

நேசிப்பாயா படத்தின் புதிய பாடல் குறித்து படக்குழு விடியோ வெளியிட்டுள்ளது.

DIN

நேசிப்பாயா படத்தின் தலைப்பு பாடல் அறிவிப்பை குறித்து படக்குழு விடியோ வெளியிட்டுள்ளது.

மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படத்தை விஷ்ணு வரதன் இயக்கி வருகிறார். ‘நேசிப்பாயா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.

காதலை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பொங்கல் வெளியீடாக ஜன. 14 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் படத்தின் தலைப்புப் பாடல் நேசிப்பாயா எப்படி உருவானதென பாடலாசிரியர் விக்னேஷ் சிவன் உடன் இயக்குநர் விஷ்ணு வரதன், இசையமைப்பாளர் யுவன் இணைந்து பேசும் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில் விக்னேஷ் சிவன் எப்படி அந்தப் பாடலை எழுதினார் என்று விளக்கியுள்ளார்.

அஜித்தின் விடா முயற்சி தள்ளிப்போனதால் பொங்கலை முன்னிட்டு 9 திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கிறது.

நேசிப்பாயா படத்தின் டைட்டில் பாடல் நாளை (ஜன. 8) வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல்: விடைபெற்றாா் அஸ்வின்

பிரக்ஞானந்தா மீண்டும் ‘டிரா’ - பதக்க வாய்ப்பை இழந்தாா் குகேஷ்

2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்: இந்தியாவின் விருப்பத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து

ஜவுளி ஏற்றுமதிக்கு 40 நாடுகளில் வாய்ப்பு: வர்த்தக அமைச்சகம்

SCROLL FOR NEXT