சார்பட்டா பரம்பரை போஸ்டர். 
செய்திகள்

சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் பகிர்ந்த பா. இரஞ்சித்!

இயக்குநர் பா. இரஞ்சித் சார்பட்டா பரம்பரை 2 படத்தினைப் பற்றி விழா ஒன்றில் பேசியுள்ளார்.

DIN

இயக்குநர் பா. இரஞ்சித் சார்பட்டா பரம்பரை 2 படத்தினைப் பற்றி விழா ஒன்றில் பேசியுள்ளார்.

ஆர்யா, துஷாரா விஜயன் நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை படம் 2021இல் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

பா. இரஞ்சித் இயக்கிய படங்களிலேயே மிகவும் வரவேற்பைப் பெற்ற படமாக சார்பட்டா பரம்பரை படமே இருக்கிறது.

சமீபத்தில் வெளியான தங்கலான் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் கலக்கியது.

நடிகர் ஆர்யா மீண்டும் சார்பட்டா பரம்பரை 2 படத்தில் நடிக்க உடலை தயார்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தனது துணை இயக்குநர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று இயக்குநர் பா.இரஞ்சித் பேசியதாவது:

இப்போதுதான் சார்பட்டா பரம்பரை 2 படத்தின் இறுதிக் காட்சியை எழுதி முடித்தேன். ஒரு படத்தினை எழுதி முடிப்பதுபோல் மகிழ்ச்சியான விஷயம் வேறு எதுவுமில்லை.

ஏற்கனவே திரைக்கதை ஆசிரியர் தமிழ்ப் பிரபா இதன் திரைக்கதையை ஒரு முறை எழுதிவிட்டார். நான் எனது பாணியில் மீண்டும் ஒருமுறை இதனை எழுதிப் பார்த்தேன். ஒரு இடத்தில் வந்து நின்றுள்ளது.

எழுதும்போது எனக்கு கிடைத்த இந்த சந்தோஷம் துணை இயக்குநர் அவருடைய புத்தகத்தை முடித்ததும் அவர் முகத்திலும் இருந்ததைப் பார்த்தேன் என்றார்.

சார்பட்டா பரம்பரை 2 திரையரங்குகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்து இயக்குநர் பா.இரஞ்சித் எதுவும் தகவல் அளிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT