மாமன் படத்தின் முதல் பார்வை போஸ்டர்.  படம்: எக்ஸ் / சூரி.
செய்திகள்

மாமன் பட முதல் பார்வை போஸ்டர்..! வெளியீட்டு மாதமும் அறிவிப்பு!

சூரி நாயகனாக நடிக்கும் மாமன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது.

DIN

சூரி நாயகனாக நடிக்கும் மாமன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது.

நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கிறார்.

லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு, ‘மாமன்’ எனப் பெயரிட்டுள்ளனர். பிரபல இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

உறவுகளின் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க நடிகை ஸ்வாசிகா சூரியின் தங்கையாக நடிக்கிறார்.

லப்பர் பந்து படத்தின் மூலம் பிரபலமடைந்த ஸ்வாசிகா தமிழில் சூர்யா - 45 படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

படத்தின் முதல்பார்வை போஸ்டர் நேற்று (ஜன.16) மாலை வெளியாகுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெளியாகவில்லை.

இந்த நிலையில் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. அத்துடன் படம் வரும் கோடை விடுமுறைக்கு வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மென் பொறியாளா் உயிரிழப்பு

தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு

பாகிஸ்தான் அமைச்சர் கையில் வெற்றிக் கோப்பையை வாங்க இந்தியா மறுப்பு! கையோடு எடுத்துச் சென்ற நிர்வாகம்!

கரூா் சம்பவம்: ஈரோட்டைச் சோ்ந்த கல்லூரி மாணவா் உள்பட 3 போ் உயிரிழப்பு

காலமானாா் ஆச்சியம்மாள்

SCROLL FOR NEXT