செய்திகள்

விடாமுயற்சி - வித்தியாசமான தோற்றத்தில் அஜித்?

விடாமுயற்சி அஜித் தோற்றம் குறித்து...

DIN

நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி திரைப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் ’விடாமுயற்சி’. இந்தப் படத்தில் மங்காத்தா படத்திற்குப் பிறகு நடிகை திரிஷா அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார்.

நடிகர் அர்ஜுன், ஆரவ், ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

முன்னதாக, சவதீகா பாடல் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். இதுவரை, 1 கோடி பார்வைகளைக் கடந்து வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிக்க: குடும்பஸ்தன் டிரைலர்!

முழுக்கதையும் அஜர்பைஜானில் நடைபெறுவது போன்ற காட்சிகள், ஒளிப்பதிவின் தரம் என ஹாலிவுட் படம்போல் எடுக்கப்பட்டிருக்கிறது.

முக்கியமாக, முழு ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள விடாமுயற்சி டிரைலரில் ஒரு காட்சியில் நடிகர் அஜித் நீண்ட தலைமுடியுடன் இருப்பதுபோல் காட்டப்பட்டுள்ளது. இது அஜித் தானா? இல்லை அஜர்பைஜான் நாட்டு நடிகரா என சமூக வலைதளங்களில் கருத்து பகிரப்பட்டு வந்த நிலையில், அக்கதாபாத்திரம் அஜித்தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரணம், படத்தில் அஜித் மாறுவேடத்தில் சென்று துப்பறியும் ஒரு காட்சிக்காக நீண்ட தலைமுடிகொண்ட தோற்றத்தில் நடித்திருக்கலாம் ஊகிக்கப்படுகிறது. இத்தோற்றம், பரமசிவன் படத்தில் அஜித்தின் தோற்றத்தை நினைவுபடுத்துவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

SCROLL FOR NEXT