செய்திகள்

மிஷ்கின் பேச்சால் சங்கடத்திற்கு ஆளான வெற்றி மாறன்!

பாட்டல் ராதா நிகழ்வில் மிஷ்கின் பேசியவை வைரலாகியுள்ளது...

DIN

பாட்டல் ராதா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் மிஷ்கின் பேசிய கருத்துகள் வைரலாகி வருகின்றன.

இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் நடிகர்கள் குரு சோமசுந்தரம், பாரி இளவழகன் (ஜமா), சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் பாட்டல் ராதா.

மதுப்பழக்கத்தால் சீரழியும் நாயகனின் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் இயக்குநர்கள் அமீர், வெற்றி மாறன், மிஷ்கின், லிங்குசாமி, பா. இரஞ்சித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிக்க: ஓடிடியில் விடுதலை - 2!

நிகழ்வில் பேசியவர்கள் மதுப்பழக்கத்தின் அடிமைத்தனம் மற்றும் தீங்கைக் குறித்து பேசினர். ஆனால், இயக்குநர் மிஷ்கின் மதுப்பழக்கத்தைக் கொண்டாடுவதாகக் கூறி தன் பேச்சை துவங்கினார்.

பேச்சின் இடையே, பலமுறை தகாத வார்த்தைகளையும் பிறரைக் காயப்படுத்தும் தொனியிலும் பேசியது சிலருக்கு சிரிப்பை வரவழைத்தாலும் வெற்றி மாறன், லிங்குசாமி உள்ளிட்டவர்களுக்கு சங்கடத்தைக் கொடுத்தது அவர்களின் முகத்தில் தெரிந்தது.

மிஷ்கின் பேசப்பேச இயக்குநர் லிங்குசாமி மேடையிலிருந்து கீழே இறங்கி வெளியே சென்றார். என்ன காரணம் எனத் தெரியவில்லை. அதேநேரம், சில இடங்களில் சிரித்தாலும் மிஷ்கின் பேச்சை வெற்றி மாறன் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

பாட்டல் ராதா நிகழ்வில் மிஷ்கின் பேச்சைக் கேட்டவர்கள், வெளிப்படையாகப் பேசுகிறேன் என்கிற நினைப்பில் மேடை நாகரீகத்தை மிஷ்கின் மீறுகிறார் என கண்டனங்களையும் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT