நீங்கள்தான் எப்போதும் எனது மருந்தாக இருந்துள்ளீர்கள் என இயக்குநர் சுந்தர். சி -க்கு நெகிழ்ச்சியாக வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.
இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மத கஜ ராஜா’ திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு உருவாகி வெளியீட்டிற்குத் தயாரானது.
இப்படத்தைத் தயாரித்த ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம் தங்களின் பழைய கடனை அடைப்பதற்காக அப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்தனர்.
இப்படம் பொங்கல் வெளியீடாக 12 ஆண்டுகள் கழித்து ஜன.12-ல் வெளியாகி 9 நாள்களில் உலகளவில் ரூ. 44 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலைல்யில் சுந்தர். சி பிறந்தநாளுக்கு விஷால் தன்னுடைய எக்ஸ் பதிவில் கூறியதாவது:
என்னுடைய மூத்த சகோதரர் / பிடித்த இயக்குநர் / சிறந்த நண்பர்/ நான் வாழ்க்கையில் பார்த்த சிறந்த மனிதர் சுந்தர். சி க்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தனிப்பட்ட, சினிமா வாழ்க்கையில் மேலும் வெற்றிகள் குவிக்க வாழ்த்துகள்.
நான் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் குடும்ப உறுப்பினராக முதலில் இந்த வாழ்த்தைத் தெரிவிக்கிறேன். எனக்கு சூப்பரான வெற்றியைக் கொடுத்ததுக்கு மிக்க நன்றி. உங்களை எப்போதும் நம்புகிறேன். நேர்மறையான சூழலில் படப்பிடிப்பு நடந்தால் நல்லதே நடக்கும்.
என்ன நடந்தாலும் எனது மருத்துவர்கள் மகிழ்ச்சியாக இரு என்று சொல்வதைவிட நீங்கள்தான் எப்போதும் எனது மருந்தாக இருந்துள்ளீர்கள். உங்களது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள் சகோதரரே. வெற்றியுடன் தொடங்கியுள்ள உங்களுக்கு மேலும் மேலும் வெற்றிகள் குவியட்டும்.
மீண்டும் நமது அற்புதமான கூட்டணி அமைய காத்திருக்கிறேன். மகிழ்ச்சி, அமைதி, செழுமை ஆகியவை கிடைக்க உங்களை மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன். உங்களை அதிகாக நேசிக்கிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.