பாலகிருஷ்ணா, அனில் ரவிபுடி, விஜய் கோப்புப் படங்கள்.
செய்திகள்

இது என்னுடையது மட்டுமல்ல, நம்முடைய பயணம்..! 10 ஆண்டுகளை நிறைவுசெய்த தெலுங்கு இயக்குநர்!

இயக்குநராக 10 ஆண்டுகள் நிறைவையொட்டி தெலுங்கு இயக்குநர் நெகிழ்ச்சியாக பதிவிட்டதாவது...

DIN

பிரபல தெலுங்கு இயக்குநர் அனில் ரவிபுடி தனது பத்தாண்டுகள் நிறைவையொட்டி நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

எஃப் 2, எஃப் 3, பகவந்த் கேசரி என்ற கமர்ஷியல் வெற்றிப் படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் அனில் ரவிபுடி.

சமீபத்தில் வெளியான இவரது சங்கராந்தி வஸ்துனாம் திரைப்படம் ரூ.230 கோடியை தாண்டி வசூலித்துள்ளது.

நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்குவதாக தகவல்கள் வெளியானது. பின்னர் அவருடைய கதையை வைத்துதான் ’தளபதி 69’ படம் உருவாகி வருவதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் இயக்குநராக 10 ஆண்டுகள் நிறைவடைந்ததுக்கு அனில் ரவிபுடி கூறியதாவது:

பத்தாண்டுகளுக்கு முன்பு, பட்டாஸ் படம் இதே நாளில் வெளியானது. இது எனது வாழ்க்கையை இயக்குநராக தொடங்கியது மட்டும் கிடையாது, நான் இப்போது என்னவாக இருக்கிறேனோ எல்லாவற்றுக்குமான அடித்தளம் அதுவே.

திரும்பிப் பார்த்தால், அனைத்துமே ஒரு பாடமாகவும் அனைத்து மைல்கல்களும் ஆசிர்வாதங்களாகவும் இருக்கின்றன. நலம் விரும்பிகள், ரசிகர்கள் அளித்த அதிகப்படியான அன்புதான் என்னை புதிய சவால்களை நோக்கி நகர்த்துகிறது.

எனது சினிமா பயணத்தில் ஒரு பகுதியாக இருந்த தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள், படக் குழுவினர், ரசிகர்கள் நீங்கள் அனைவரும் எனது குடும்பத்தினர். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் இவ்வளவு வெற்றிக்கும் காரணம்.

திரைத்துறையில் 10 ஆண்டுகள் முடித்துள்ள நான் மீண்டும் உங்களை எனது திரைப்படத்தின் மூலம் மகிழ்விப்பேன், தொடர்பில் இருக்கவும் வைப்பேன் என சத்தியம் செய்கிறேன். இது என்னுடைய பயணம் மட்டுமல்ல, நம்முடைய பயணம்.

மறக்க முடியாத பத்தாண்டுகளாக மாற்றியதற்கு அனைவருக்கும் நன்றி. உங்களைப் போன்றவர்கள் கிடைக்க நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேனியில் செப்.19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மதுப் புட்டிகளை பதுக்கிய முதியவா் கைது

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் நாளை மின்தடை

இந்தியா்களுக்கு ஏமாற்றம்

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மாணவா்களுக்கு காய்ச்சல்

SCROLL FOR NEXT