மோகன்லால், பிருத்விராஜ்.  
செய்திகள்

எம்புரான் டீசர் ரிலீஸ் தேதி!

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள எம்புரான் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள எம்புரான் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

லைகா தயாரிப்பில் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் எம்புரான் படத்தில் நடித்து முடித்துள்ளார். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்திற்காக பல ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

லூசிஃபர் மிகப்பெரிய வெற்றிப்படமானது. அப்படத்தில், மோகன்லாலின் உதவியாளராக பிருத்விராஜ் சையத் மசூத் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், நடிகர் டொவினோ தாமஸ் கேரள முதல்வராக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் ஜன.26ஆம் தேதி மாலை 7.07மணிக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

மோகன்லால் நடித்து இயக்கி கடைசியாக வெளியான பரோஜ் வணிகத் தோல்வியை சந்தித்தாக தகவல்கள் வெளியானது. அதனால், எம்புரான் படத்தின் மீது மிகுந்த ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

டீசர் குறித்த அப்டேட் போஸ்டர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

70 வயதானவா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை!

கரூர் சம்பவம்: தவெக நிர்வாகிகள் பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்புத் துறையினர் சோதனை: சென்னையில் பணம், தங்க நாணயம் பறிமுதல்

சாலைகளில் தற்காலிக கொடிக்கம்பங்கள் அமைக்க தலா ரூ.1, 000 வசூலிக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

மீனவர்கள் பிரச்னை: வெளியுறவு அமைச்சரிடம் வலியுறுத்துவேன்

SCROLL FOR NEXT