அஜித்குமார், மகிழ் திருமேனி. 
செய்திகள்

பொய் சொல்லுவதை நிறுத்துங்கள்: மகிழ் திருமேனி

நேர்காணல் ஒன்றில் விடாமுயற்சி இயக்குநர் மகிழ் திருமேனி வதந்திகள் குறித்து பேசியுள்ளார்.

DIN

விடாமுயற்சி படத்தின் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் மகிழ் திருமேனி வதந்திகள் குறித்து பொய் சொல்லுவதை நிறுத்துங்கள் எனப் பேசியுள்ளார்.

விடாமுயற்சி படம் நீண்டகாலமாக தயாரிப்பில் இருந்தன. முதலில் பொங்கலுக்கு வரவிருந்தது. பின்னர், ஒத்திவைக்கப்பட்டது.

விடாமுயற்சி படத்தின் டிரைலர், பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

படப்பிடிப்பு தாமதமானதால் அஜித் குமாருக்கும் மகிழ் திருமேனிக்கும் சண்டை என சிலர் யூடியூப்பில் கருத்து தெருவித்தனர்.

படம் பிப்.6ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற மகிழ்திருமேனி கூறியதாவது:

மீண்டும் அஜித்துடன் பல படங்கள்

எனது சினிமா வாழ்க்கையில் ஒரு காட்சி கூட மீண்டும் படப்பிடிப்பு நடத்தியதில்லை. இதை யாராவது நிரூபித்துவிட்டால் நான் சினிமாவை விட்டே விலகுகிறேன். நான் கூறியதை அவர்களால் நிரூபிக்காவிட்டால் பெரிதாக எதுவும் செய்ய வேண்டாம் குறைந்தபட்சம் பொய் சொல்லுவதை நிறுத்துவார்களை என்பதே என் கேள்வி.

எனக்கும் அஜித் சாருக்கும் சண்டை என வதந்தியைக் கிளப்பினார்கள். அதனால், எனக்கும் அஜித் சாருக்கும் உள்ள பந்தம் இன்னமும் வலுவடைந்தது. என்னைப் பற்றி, எனது மகள் குறித்து அக்கறையோடு விசாரிப்பார்.

’மகிழ், நாம் மீண்டும் இணைந்து பல படங்களில் பணியாற்றுவோம். நான் இதை சிவா, எச்.வினோத்திடம் சொல்லியிருக்கிறேன். தற்போது, உங்களிடமும் சொல்லுகிறேன்’ என அஜித் சார் ஒருமுறை என்னிடம் கூறியதாக மகிழ் திருமேனி நெகிழ்ச்சியாகப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிமுக படத்திலேயே ஆச்சரியம்... சய்யாரா வசூல் எவ்வளவு தெரியுமா?

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

SCROLL FOR NEXT