முகப்பு
செய்திகள்

ஹிந்தியில் அறிமுகமாகும் அருண் மாதேஸ்வரன்!

அருண் மாதேஸ்வரனின் புதிய படம் குறித்து...

Updated On : 29 ஜனவரி, 2025 at 11:29 AM
அருண் மாதேஸ்வரன்
பகிர்:

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ஹிந்தியில் அறிமுகமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ராக்கி, சாணிக்காயிதம், கேப்டன் மில்லர் படங்களின் மூலம் தனக்கென ஆக்சன் பாணி திரைப்படத்தை உருவாக்கிக்கொண்டவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.

இவர் தனுஷ் நடிக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கைக் கதையை திரைப்படமாக எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இதையும் படிக்க: எஸ்கே - 25 பெயர் டீசர்!

ஆனால், பல்வேறு காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் இளையராஜா படத்தின் வேலைகள் எதுவும் நடைபெறாமல் இருக்கின்றன.

இந்த நிலையில், சரிதா அஸ்வின் மற்றும் நசிர் அகமது ஆகியோரின் ரோரிங் ரிவர் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ஹிந்திப் படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் அதற்கான திரைக்கதை வேலைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.