செய்திகள்

ஃபஹத் ஃபாசில் - நிவின் பாலி கூட்டணியில் புதிய படம்!

நடிகர் நிவின் பாலியின் புதிய படம் அறிவிப்பு...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் நிவின் பாலி இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நடிகர்கள் நஸ்லன், மமிதா பைஜு நடிப்பில் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவான பிரேமலு கடந்தாண்டு பிப்.9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இன்றைய காலகட்ட இளைஞர்களுக்கு நெருக்கமான கதைக்களத்தில் உருவான இப்படம் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமானது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, பிரேமலுவின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக அறிவிப்பும் வெளியானது. ஆனால், அப்படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கிரிஷ் ஏடி நடிகர் நிவின் பாலியை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கவுள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் ஃபஹத் ஃபாசில் இப்படத்தைத் தயாரிக்க நாயகியாக நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார்.

இப்படமும் பிரேமலு போல் நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவாகிறதாம். படத்திற்கு, “பெத்லஹம் குடும்ப யூனிட் (Bethlehem kudumba unit) எனப் பெயரிட்டுள்ளனர்.

director girish ad do a new film with actors nivin pauly, mamitha baiju produced by fahadh faasil

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவினின் கிஸ் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

உ.பி.யில் ஜலாலாபாத் ஊரின் பெயர் பரசுராம்புரி என மாற்றம்!

புதுமண தம்பதிகளுக்கு இலவச பட்டுவேட்டி, பட்டுச் சேலை: இபிஎஸ் வாக்குறுதி!

சத்தீஸ்கர்: ரூ.30 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 8 நக்சல்கள் சரண்!

இந்தியா கூட்டணி கடைப்பிடிக்கும் ஒரே அரசியலமைப்பு, ஊழல் மட்டுமே - அண்ணாமலை

SCROLL FOR NEXT