செய்திகள்

அனுஷ்காவின் காதி வெளியீடு ஒத்திவைப்பு!

காதி திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு...

இணையதளச் செய்திப் பிரிவு

அனுஷ்கா நடிப்பில் உருவான காதி திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் கிரிஷ் ஜெகர்லமுடி இயக்கத்தில் நடிகை அனுஷ்கா ‘காதி’ (ghaati) என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம்பெற்றிருந்ததைத் தொடர்ந்து இப்படம் வருகிற ஜூலை 11 ஆம் தேதி பான் இந்திய வெளியீடாகத் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்திருந்தனர்.

ஆனால், படத்திற்கான புரமோஷன் பணிகள் துவங்காமல் இருந்த நிலையில், தற்போது தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, காதி படத்தின் தரத்தை மேம்படுத்த வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால், இப்படம் செப்டம்பர் வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

actor anushka, vikram prabhu's ghaati movie postponed for technical reasons.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

3 ஆண்டு தடைக்குப் பின்... 39 வயதில் கம்பேக் தரும் ஜிம்பாப்வே வீரர்!

மாலேகான் குண்டு வெடிப்பு: பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை!

பாரத் மாதா கி ஜெய்... பாகிஸ்தானுடன் விளையாட மறுத்ததுக்கு இந்தியா விளக்கம்!

SCROLL FOR NEXT