கிங்டம் படத்தின் போஸ்டர் 
செய்திகள்

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான கிங்டம் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். கடைசியாக, இவர் கல்கி 2898 ஏடி எனும் திரைப்படத்தில் அர்ஜுனர் பாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது, நடிகர் விஜய் தேவரகொண்டா ஜெர்ஸி படத்தின் இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சமூகப் பிரச்னையை முன்வைத்து திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றதுடன் இப்படம் ஜூலை 4 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், கிங்டம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டு, வரும் ஜூலை 31 ஆம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பான விடியோவையும் வெளியிட்டுள்ளது.

The new release date of the film Kingdom starring actor Vijay Deverakonda has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீலகிரியில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்

திருச்சியில் டிசம்பரில் கள் விடுதலை, மதுவிலக்கு மாநாடு செ.நல்லசாமி

சாலை விபத்து: சமையலா் உயிரிழப்பு

நாளைய மின்தடை: நீடூா்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: ஆட்சியா்

SCROLL FOR NEXT