கண்மணி - அஷ்வத் தம்பதி 
செய்திகள்

கண்மணி - அஷ்வத் தம்பதியின் குழந்தை பெயர் தெரியுமா?

கண்மணி - அஷ்வத் தம்பதி அவர்களின் குழந்தைக்கு வைத்துள்ள பெயர் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

கண்மணி - அஷ்வத் தம்பதியினர் அவர்களின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவினை நடத்தியுள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலி என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் நடிகை கண்மணி மனோகரன்.

அந்தத் தொடரில் அவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் நடித்திருந்தார். இந்தத் தொடரும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மகாநதி உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.

இவர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வணக்கம் தமிழா உள்ளிட்ட பல்வேறு பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றி வரும் அஷ்வத்தை கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டார்.

இவர்களின் திருமணம் உற்றார் உறவினர் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இன்ஸ்டாகிராமில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர்கள் இருவரும், அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை சமூக ஊடங்களில் பதிவிடுவது வழக்கம்.

தாங்கள் கருவுற்று இருப்பதாக கண்மணி - அஷ்வத் தம்பதியினர் முன்னதாக அறிவித்திருந்த நிலையில், இவர்களுக்கு ஜூன் 9 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், அண்மையில் இவர்களின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றது. விழாவினை விமர்சையாக கொண்டாடிய இவர்கள் , ’துருவ் யாத்ரா அஷ்வத்’ என பெயர் சூட்டியுள்ளனர்.

இதை இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தெரிவித்துள்ளனர். கண்மணி - அஷ்வத் தம்பதியினரின் குழந்தைக்கு ரசிகர்கள், சின்ன திரை பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Kanmani and Ashwath couple held a naming ceremony for their child.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனைத்தையும் சொந்தம் கொண்டாட நினைக்கிறது பாஜக: அகிலேஷ் யாதவ்

குஜராத்தில் பிரதமர் மோடி சாலைவலம்: ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு!

யோலோ டீசர்!

மோடியின் பட்டப்படிப்பு விவகாரம்: உத்தரவை ரத்து செய்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பு!

குடியரசுத் தலைவருடன் ஃபிஜி பிரதமர் சந்திப்பு!

SCROLL FOR NEXT