முகப்பு
செய்திகள்

பிரணவ் மோகன்லாலின் ஹாரர் பட போஸ்டர் வெளியீடு!

பிரம்மயுகம் இயக்குநர் இயக்கத்தில் உருவான டைஸ் ஐரே படத்தின் போஸ்டர் வெளியானது...

Updated On : 13 ஜூலை, 2025 at 7:17 AM
பகிர்:

பிரணவ் மோகன்லால் - ராகுல் சதாசிவன் கூட்டணியில் உருவான திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மயுகம் படத்தின் இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் ஹாரர் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் நைட் ஷிஃப்ட் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்திற்கு ‘டைஸ் ஐரே’ (Dies irae) எனப் பெயரிட்டுள்ளனர். இதன் பொருள் லத்தீன் மொழியில் மரணத்தைக் குறிக்கிறது.

இந்த நிலையில், நடிகர் பிரணவ் மோகன்லாலின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்ப்டம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

pranav mohanlal's dies irae movie new poster out.

முழு கட்டுரையைப் படிக்க →