நடிகர் தீரஜ் குமார் எக்ஸ்
செய்திகள்

பழம்பெரும் பாலிவுட் நடிகர் தீரஜ் குமார் காலமானார்!

பழம்பெரும் பாலிவுட் நடிகர் தீரஜ் குமார் மறைவு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பழம்பெரும் பாலிவுட் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான தீரஜ் குமார் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பழம்பெரும் பாலிவுட் மற்றும் பஞ்சாபி மொழி நடிகரும் தயாரிப்பாளருமான தீரஜ் குமார் (வயது 79), இன்று (ஜூலை 15) காலை உடல்நலக் குறைவால் காலமானார்.

கடந்த சில நாள்களாக நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் தீரஜ் குமார், மும்பையிலுள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் ஜூன் 12 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தீரஜ் குமார், இன்று (ஜூலை 15) காலை 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவரது இறுதிச் சடங்கு, நாளை (ஜூலை 16) மும்பையிலுள்ள பவன் ஹான்ஸ் மின் மயானத்தில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, தீரஜ் குமார் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் சின்ன திரை நாடகங்களில் நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தார்.

1974 முதல் 1984 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பஞ்சாபி மொழி திரைப்படங்களிலும் நடித்த அவர், 1965 ஆம் ஆண்டு ஃபிலிம்ஃபேர் அமைப்பு நடத்திய திறமைப் போட்டியின் மூலம் பொழுதுபோக்குத் துறையில் அறிமுகமானார்.

அந்தப் போட்டியில், தீரஜ் குமாருடன், பிரபல பாலிவுட் நடிகர் ராஜேஷ் கண்ணா மற்றும் இயக்குநர் சுபாஷ் கய் ஆகியோரும் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: காதலியை அறிமுகப்படுத்திய சீரியல் நடிகர்!

Veteran Bollywood actor, director and producer Dheeraj Kumar has passed away.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காவல்துறைக்கு ஒரு பிரச்னை!

புற்றுநோய்க்கு தடுப்பூசி தயார்: ரஷிய அரசின் அனுமதிக்கு காத்திருப்பு!

அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

அழகுக் குறிப்புகள்...

இடுப்பு வலி குணமாக...

SCROLL FOR NEXT