வெளியானது இந்திரா படத்தின் முதல் பாடல்!
நடிகர் வசந்த் ரவி நடித்துள்ள இந்திரா பட முதல் பாடல் குறித்து...
நடிகர் வசந்த் ரவி நடித்துள்ள இந்திரா படத்தின் முதல் பாடலின் லிரிக்கல் விடியோ வெளியானது.
இயக்குநர் ராமின் தரமணி படத்தில் நாயகனாக அறிமுகமானவர் வசந்த் ரவி. பின்னர், ராக்கி, ஜெயிலர் படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.
கடைசியாக வெப்பன் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
Advertisement
Advertisement
தற்போது, ஜேஎஸ்எம் மற்றும் எம்பெரர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இந்திரா எனும் படத்தில் நடித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் சபரிஷ் நந்தா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை மெஹ்ரின் பிர்ஜாடா நாயகியாக நடித்துள்ளார்.
இசையமைப்பாளர் அஜ்மல் தக்ஷின் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாடலின் லிரிக்கல் விடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இந்தப் படம் ஆக. 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
The lyrical video of the first song from the film Indira, starring actor Vasanth Ravi, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.