செய்திகள்

தொடர் பாராட்டு மழையில் ஷ்ருதி ஹாசன், சின்மயி!

ஷ்ருதி ஹாசன், சின்மயியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்...

DIN

தக் லைஃப் பாடல்களைப் பாடிய ஷ்ருதி ஹாசன், சின்மயியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் கமல் ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்வில் படத்தில் இடம்பெற்ற பாடல்களைப் பாடகர்கள் பாடினர்.

அதில், ஷ்ருதி ஹாசன் பாடிய ‘விண்வெளி நாயகா’ பாடலும் பாடகி சின்மயி பாடிய ‘முத்த மழை’ பாடலுக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக, இருவரும் அப்பாடல்களை மேடையில் பாடிய விதத்தைப் பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் இருவரின் விடியோக்களையும் ரீல்ஸ்களாக மாற்றியதால் ஆச்சரியப்படும் வேகத்தில் அவை டிரெண்டிங்கில் இருக்கின்றன.

அதிலும், சின்மயி பாடிய பாடல் காதலுக்கானது என்பதால் பலரும் தங்கள் இணைகளுடன் அப்பாடல் வரிகளுக்கு மென்மையான ரீல்ஸ்களை உருவாக்குகின்றனர்.

தங்களுக்குக் கிடைத்த இந்த வரவேற்பை எதிர்பார்க்காத ஷ்ருதியும் சின்மயும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இருவரில் யாரோ ஒருவருவக்காவது தேசிய விருது கிடைக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

பிபிஎல்: முதல் அரைசதத்தை பதிவுசெய்த பாபர் அசாம்!

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

SCROLL FOR NEXT