தக் லைஃப் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் மந்தமாகவே வணிகமாகி வருகின்றன.
நடிகர் கமல் ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் டிரைலர், பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தைத் திரையரங்குகளில் காண்பதற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகள் இன்று அதிகாலையே துவங்கியது.
சென்னையில் பல முன்னணி திரையரங்குகளில் முதல் நாளுக்கான டிக்கெட்களே இன்னும் முழுமையாக விற்பனையாகவில்லை. குறிப்பாக, முதல் நாள் முதல் காட்சி எந்தத் திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை. இதனால், படக்குழுவினர் ஏமாற்றத்தில் உள்ளனர்.
இன்னும் 4 நாள்களில் படம் வெளியாகிறது என்பதால் அதற்குள் டிக்கெட் விற்பனை சூடுபிடிக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன.
இதையும் படிக்க: தொடர் பாராட்டு மழையில் ஷ்ருதி ஹாசன், சின்மயி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.