முகப்பு
செய்திகள்

விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் வெளியீட்டுத் தேதி!

லவ் மேரேஜ் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு....

Updated On : 6 ஜூன், 2025 at 11:59 AM
பகிர்:

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான லவ் மேரேஜ் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குநர் ஷண்முக பிரியன் இயக்கிய படத்திற்கு லவ் மேரேஜ் எனப் பெயரிட்டுள்ளனர்.

படத்தின் கதையை டாணாக்காரன் இயக்குநர் தமிழ் எழுதியுள்ளார். இதில் சுஸ்மிதா பட், மீனாக்‌ஷி தினேஷ், ரமேஷ் திலக் நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

இந்தப் படம் கோடை விடுமுறையில் வெளியாகுமென படக்குழு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →