செய்திகள்

நிறைவடைந்தது பொன்னி தொடர்!

பொன்னி தொடர் நிறைவு தொடர்பாக...

DIN

வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய பொன்னி தொடர் 663 எபிசோடுகளுடன் நிறைவடைந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தொடர் பொன்னி. இத்தொடரில் நாயகனாக சபரி நாதனும் நாயகியாக வைஷ்ணவி சுந்தரும் நடித்து வந்தனர்.

பொன்னி என்ற பாத்திரம் எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்பட்டு வந்தது. கடந்த 2023 மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இத்தொடர், கடந்த 2 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் 663 எபிசோடுகளுடன் நிறைவடைந்துள்ளது.

இத்தொடருக்கான கதையை பிரியா தம்பி எழுதி வந்தார். நீரவி பாண்டியன் இயக்கி வந்தார். கனா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து இருந்தது.

இந்நிலையில், கனா தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், ”விஜய் டிவி, கனா ப்ரோடக்‌ஷன்
மார்ச் 27, 2023 அன்று தொடங்கி 663 பகுதிகள் ஒளிபரப்பான நமது “பொன்னி” தொடர் இன்றுடன் இனிதே நிறைவுற்றது.

இந்த நற்பயணத்தில் முதல் நாள் தொடங்கி இன்று வரை கைகோத்து உடன் நின்ற ஒவ்வொருவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி! மீண்டும் ஒரு வெற்றி தொடரில் உங்களை மகிழ்விக்க காத்திருக்கிறோம். என்றும் எங்கள் கானாவிற்கு துணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளது.

பொன்னி தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், இதற்கு பதிலாக தென்றலே மெல்ல பேசு என்ற புதிய தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு இன்றுமுதல்(ஜூன் 9) ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதையும் படிக்க: கண்மணி - அஷ்வத் தம்பதிக்கு குழந்தை பிறந்தது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT