செய்திகள்

பிரேமலு - 2 கைவிடப்படுகிறதா?

பிரேமலு - 2 குறித்து...

DIN

பிரேமலு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் இன்னும் துவங்காமல் இருக்கின்றன.

இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நடிகர்கள் நஸ்லன், மமிதா பைஜு நடிப்பில் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவான பிரேமலு கடந்தாண்டு பிப்.9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இன்றைய காலகட்ட இளைஞர்களுக்கு நெருக்கமான கதைக்களத்தில் உருவான இப்படம் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமானது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, பிரேமலுவின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக அறிவிப்பும் வெளியானது.

இயக்குநர் கிரிஷ் ஏடி உள்பட அதே படக்குழுவினர் இணைவார்கள் எனக் கூறப்பட்டது. ஆனால், இதற்கான பணிகள் இன்னும் துவங்காமல் இருக்கின்றன.

பிரேமலு படத்தைத் தொடர்ந்து நஸ்லன் ஆலப்புழா ஜிம்கானா படத்தில் நடித்தார். அப்படம் வெற்றிப்படமாகவே அமைந்தது.

இந்த நிலையில், இயக்குநர் கிரிஷ் ஏடி பிரேமலு - 2 படத்திற்கான கதையை நஸ்லனிடம் சொன்னதாகவும் நஸ்லனுக்கு கதை பிடிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது, கிரிஷ் ஏடி நடிகர் நிவின் பாலியை வைத்து புதிய படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளாராம். நஸ்லனும் வேறு படத்திற்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இப்படம் கைவிடப்படும் வாய்ப்புகளே அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT