முகப்பு
செய்திகள்

ஃபகத் ஃபாசில் - எஸ்.ஜே.சூர்யா படம் கைவிடப்பட காரணம் என்ன? விபின் தாஸ் பதில்!

மலையாள இயக்குநர் விபின் தாஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது...

Updated On : 13 ஜூன், 2025 at 12:23 PM
ஃபகத் ஃபாசில், எஸ்.ஜே.சூர்யா. - கோப்புப் படங்கள்.
பகிர்:

மலையாள இயக்குநர் விபின் தாஸ் ஃபகத் ஃபாசில் - எஸ்.ஜே.சூர்யா படம் கைவிடப்பட்டது எனக் கூறியுள்ளார்.

ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தின் மூலம் விபின் தாஸ் பிரபல இயக்குநராக மாறியிருக்கிறார்.

இவரது இயக்கத்தில் மோகன்லால் நடிப்பதாகவும் எஸ்.ஜே.சூர்யா - ஃபக்த் ஃபாசில் புதிய படத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

Advertisement

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் விபன் தாஸ் இது குறித்து கூறியதாவது:

மோகன் லால் சாரிடம் ஒரு கதைச் சொல்லியிருந்தேன். அது அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அந்தப் படம் கைவிடப்பட்டது.

அடுத்ததாக, எஸ்.ஜே.சூர்யா - ஃப்கத் ஃபாசிலும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. இந்தப் படமும் தேதி, பட்ஜெட் காரணமாக கைவிடப்பட்டது.

இவர்களுக்குப் பதிலாக மற்ற 2 நடிகர்களை வைத்து இந்தப் படம் விரைவில் எடுப்பேன் எனக் கூறினார்.

விபின் தாஸ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி வெற்றிப் பெற்ற வாழை படத்தின் இரண்டாவது பாகம் தயாராகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.