சிம்பு - வெற்றி மாறன் படத்தில் கவின்?
சிம்பு - வெற்றி மாறன் பட நடிகர்கள் குறித்து...
சிம்பு - வெற்றி மாறன் படத்தில் நடிகர் கவின் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் சிம்பு தன் 49-வது படமாக இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் வடசென்னை கேங்ஸ்டர் கதையாக உருவாகவுள்ளது.
படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில், இப்படத்தில் நடிகர் கவின் மற்றும் இயக்குநர் நெல்சன் ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் நடிப்பதாகத் தகவலகள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
மேலும், இப்படத்தில் நடிகர்கள் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனராம். இதனால், இப்படம் வடசென்னை படத்தின் கதையுடன் தொடர்புடைய படமாகவே இருக்கும் எனத் தெரிகிறது.
நடிகர் சிம்புவும் ரௌடி தோற்றத்திற்கு மாறியுள்ளாராம். இது ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: வெற்றி மாறனால் தனுஷுக்கு சங்கடம்?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.