எம். ஜி. ஆர்.  
செய்திகள்

எம். ஜி. ஆர். தேடிக்கொண்டிருந்த ஜோதிடர் யார்?

எம்ஜிஆரால் இறுதிவரை தேடப்பட்ட ஜோதிடர் குறித்து...

DIN

மறைந்த நடிகர் எம்ஜிஆர் நீண்ட காலமாக ஒரு ஜோதிடரைத் தேடிக்கொண்டிருந்த தகவல் சுவாரஸ்யத்தைக் கொடுத்துள்ளது.

மறைந்த நடிகரும் முதல்வருமான எம். ஜி. ஆருக்கு கடவுள் நம்பிக்கை இருந்திருக்கிறது. ஆனால், அன்றாட வாழ்க்கையில் அதை நேர்த்தியாகக் கடைபிடிப்பவர் அல்ல. அதேநேரம், மூட நம்பிக்கைகளில் அவருக்குத் துளியும் ஈடுபாடுகள் இருந்ததில்லை.

ஆரம்ப காலங்களில் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தபோது பொதுநிகழ்வுகளில் திருநீறு வைத்து வந்தவர், திமுகவில் இணைந்தபின் அதையும் தவிர்த்தார்.

இப்படியான எம்ஜிஆர், தன் மறைவுவரை ஒரு ஜோதிடரைத் தேடிக்கொண்டிருந்தார் என்றால் நம்ப முடிகிறதா?

மறைந்த நடிகர் எம். ஆர். ராதாவின் பேரனும் நடிகருமான எம். ஆர். ஆர். வாசு விக்ரம் ஒரு நேர்காணலில், “எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இருக்கிறது. பிறந்த நேரம் துல்லியமாகத் தெரிந்தால் சில விஷயங்களை ஊகித்துவிடலாம். அதற்கு உதாரணம், எம்ஜிஆர். அவர் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தபோது ஜோதிடர் ஒருவரைச் சந்தித்திருக்கிறார். ஜோதிடம் பார்த்தவர் எம்ஜிஆரிடம், “உங்களைப் பல்லக்கில் வைத்து கொண்டாடுவார்கள்” எனக் கூற, இதைக்கேட்டு ஆத்திரமான எம்ஜிஆர், ஜோசியகாரன் பொய் சொல்கிறான் என விரட்டி அடித்திருக்கிறார்.

எம்ஜிஆர்

ஆனால், சில ஆண்டுகள் கழித்து எம்ஜிஆர் நடித்த படமொன்று மதுரையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. எம்ஜிஆர் அங்கு சென்றபோது அவரின் ரசிகர்கள் பெரிய பல்லக்கில் அவரை ஏற்றி அழகுபார்த்தனர். இந்த நிகழ்வு எம்ஜிஆருக்கு அதிர்ச்சியைத் தர, அன்றிலிருந்து அந்த ஜோதிடரைத் தேடிக்கொண்டே இருந்திருக்கிறார். ஆனால், இறுதிவரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.” எனக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் முத்திரை பதித்த எம்ஜிஆர், ஜோதிடர் ஒருவரை இறுதிவரை தேடிக்கொண்டிருந்தது சுவாரஸ்யம்தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் வகுப்புத் தோழன்..! மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT